Friday, September 30, 2011

வாச்சாந்தி கொடூரம் மற்றும் பரமக்குடி துப்பாக்கிசூடு.

கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி என்று தன் வாழ்க்கை முழுவதும் மூடநம்பிக்கை, பார்ப்பன ஆதிக்கம், சாதி வெறி, ஆணாதிக்கம் அனைத்தையும் எதிர்த்து வந்தார் தந்தை பெரியார்.
தாழ்த்தப்பட்ட மக்களை சமூகத்திலிருந்து வெறுத்து ஒதுக்குவது மரண தண்டனையை விட கொடியது என்றார் டாக்கடர் அம்பேத்கர்.
ஆனால் அவர்களுக்கு முன்பும், அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு பின்பும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்களால் அவிழ்த்து விடப்பட்ட தீண்டாமை கொடுமைகள் ஆயிரம்..ஆயிரம். தஞ்சை மாவட்டம் கீழ் வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவாசாயத் தொழிலாளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடூரம் இப்பொழுதும் நெஞ்சை விட்டு அகலாத வடு. இப்படி எண்ணற்ற வடுக்களை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பது இங்கு நிலவும் தீண்டாமை கொடுமை, அதை தூக்கிச் சுமக்கும் வர்ணாசிரமம், அந்த வர்ணாசிரமத்தை உருவாக்கி அதை உயிருக்கு நிகராக பாதுகாக்கும் பார்பன சக்திகளும். இந்த சமூக அமைப்பின் கீழ் படிந்திருக்கும் இந்த வர்ணாசிரமக்க கசடுகளையெல்லாம் அகற்றாத வரை கீழ்வெண்மணிகள் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அப்படி தொடர்ந்த, தொடர்கின்ற வன்கொடுமையின் தொடர்ச்சியே வாச்சாந்தி கொடூரம் மற்றும் பரமக்குடி துப்பாக்கிசூடு.

No comments:

Post a Comment